இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மிகப்பிரமாண்டமாக உருவான திரைப்படம் தான் “பொன்னியின் செல்வன்”. பல ஆண்டுகாலமாக “பொன்னியின் செல்வன்” கதையை படமாக்க போராடிய இயக்குனர் மணிரத்னத்திற்கு தற்போது பலன் கிடைத்துள்ளது. ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய் மற்றும் திரிஷா என பலர் நடித்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மேலும் இந்தத் திரைப்படத்தை மிகப்பிரமாண்டமாக லைக்கா நிறுவனமும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ளது. இரண்டு பாகங்களாக உருவான இந்த திரைப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியானது.
இந்த படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் ஏற்படுத்திய எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடி வரும் “பொன்னியின் செல்வன்” திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்திய முழுவதும் இப்படம் அமோகமான வரவேற்பை பெற்று வருகின்றது. மேலும் வசூலிலும் மிகப்பெரிய சாதனையை எட்டியுள்ளது. இதுவரை இப்படம் 300 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.
இந்நிலையில் ஒரே ஒரு இடத்தில மட்டும் இப்படத்தின் வசூல் சொதப்பியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது கர்நாடகா மாநிலத்தில் பொன்னியின் செல்வன் வசூல் எதிர்பார்த்த அளவிற்கு இல்லையாம். அதற்கு காரணம் அங்கு kantara படம் வெளியாகிவுள்ளதால் அனைத்து திரையரங்கிலும் அப்படத்திற்கே முன்னுரிமை வழங்கப்படுகின்றதாம். அதன் காரணமாகவே “பொன்னியின் செல்வன்” படத்திற்கு மிக குறைந்த அளவிலேயே திரையரங்குகள் கிடைத்துள்ளதாக தகவல் வந்துள்ளது. ஏனெனில் மற்ற மாநிலங்களில் “பொன்னியின் செல்வன்” வசூல் அமோகமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.