தேவையான பொருட்கள்
முளைக்கீரை – ஒரு கைப்பிடி அளவு
அதிமதுரம் – 2 துண்டு
மஞ்சள் – 2 சிட்டிகை
செய்முறை
- முதலில் முளைக் கீரையை நன்றாக சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
- பாத்திரம் ஒன்றில் தண்ணீர் வைத்து அதில்கீரை, மஞ்சள் பொடி மற்றும் அதிமதுரம் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.
- தண்ணீர் நன்றாகக் கொதித்து பாதியாக வற்றிய பின்னர் இறக்கிவிடவும்.
- இதனை வடிகட்டி குடித்து வருவதால் தொடர் இருமல் பிரச்சனையிலிருந்து விடுபடமுடியும்.
பிற நன்மைகள்
- மூளையின் வளர்ச்சியை அதிகப்படுத்த முடியும்.
- காய்ச்சல் போக்க உதவும்.
- அதிக பசியை தூண்ட உதவும்.
- உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை அளிக்கும்.
- முளைக்கீரை வயிற்றுப் புண்களை ஆற்ற அருமருந்து.
- முக பொலிவு கிடைக்கும்.