முளைகட்டிய வெந்தயம் செய்ய தெரியுமா ..? அவற்றின் முறைகள்.
* முதலில் வெந்தயத்தை நீரில் நன்கு கழுவி, ஒரு பெரிய கிண்ணத்தில் போட்டு, தண்ணீர் ஊற்றி, 12 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின் அந்நீரை வடிகட்டிவிட்டு, ஒரு ஈரமான மஸ்லின் துணியில் வெந்தயத்தைப் போட்டு கட்டி, அறை வெப்பநிலையில் வைக்க வேண்டும்.
* பிறகு 12 மணிநேரம் கழித்து, வெந்தயத்தைக் கழுவி விட்டு, மீண்டும் துணியில் கட்டி வைக்க வேண்டும். இப்படி 2-3 நாட்கள் செய்து வர, வெந்தயம் முளைக்கட்டியிருப்பதைக் காணலாம்.
* பிறகு 12 மணிநேரம் கழித்து, வெந்தயத்தைக் கழுவி விட்டு, மீண்டும் துணியில் கட்டி வைக்க வேண்டும். இப்படி 2-3 நாட்கள் செய்து வர, வெந்தயம் முளைக்கட்டியிருப்பதைக் காணலாம்.
இரண்டாவது முறை:
* வெந்தயத்தை எடுத்துக் கழுவிட்டு, முதல் நாள் இரவு தண்ணில ஊறப் போட்டுருங்க. மறு நாள் நல்லா ஊறியிருக்கும். அப்ப அந்தத் தண்ணியை வடிச்சிட்டு, மெல்லிசு துணி இருந்தா அதுல கட்டி, அதே பாத்திரத்தில் போட்டு இறுக்கமா மூடி வச்சிருங்க.
* துணியோட ஈரம் காயாம அப்பப்ப, ஒரு மூணு அல்லது நாலு மணி நேரத்துக்கொரு தரம் லேசா தண்ணி தெளிச்சுக்கிட்டே இருக்கணும். மறு நாள் துணியை தொளைச்சுக்கிட்டு முளை விட்டிருக்கும் பாருங்க, பாத்தாலே அவ்ளோ சந்தோஷமா இருக்கும்.
துணி இல்லையென்றால் இப்படி செய்யுங்கள்:
வெந்தயம் ஊற வெச்ச தண்ணீரை வடிச்ச பிறகு, அதே பாத்திரத்தில் அப்படியே போட்டு, நல்லா மூடி வைக்கவேண்டும். மூணு அல்லது நாலு மணி நேரத்துக்கொரு தரம், பயறைக் கழுவி, தண்ணீரை வடிகட்டி வைக்கணும். மறு நாள் பயறு முளை விட்டு இரண்டு மடங்கா ஆயிரும்.
1. பயறை 10 நாட்கள் நிழலில் காய வைக்கவும்.
2. ஒரு நாள் சூரிய வெளிச்சத்தில் காய வைக்கவும்.
3. நன்று காய்ந்த பின் மிஷினில் திரித்துக் கொள்ளவும்.
4. அரைத்த வெந்தய பொடியை
காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்து கொள்ளவும்.
எப்படி பயன்படுத்துவது…❓முளைகட்டிய வெந்தயத்தை:
வெந்தயத்தை முளைக்கட்ட வைத்தால், அதில் வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் ஏராளமான அளவில் நிறைந்திருக்கும். இந்த முளைக்கட்டிய வெந்தயத்தை காலையில் வெறும் வயிற்றில் ஒரு கையளவு சாப்பிட்டு வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.