சமாஜ்வாதி கட்சியின் நிறுவனத் தலைவர் முலாயம் சிங், வயிற்றுப் பிரச்னை காரணமாக மும்பையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங்குக்கு (80) திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு வயிற்றுப் பிரச்னை இருந்ததைத்தொடர்ந்து அவரை மருத்துவர்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தினார்கள்.
அதன்படி முலாயம் சிங், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயிறு சம்மந்தமான பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.