உத்தர பிரதேசத்தில் 3 நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான முலாயம் சிங் யாதவ் கடந்த சில தினங்களுக்கு முன் கடும் உடல்நலக் குறைவால் டெல்லியை அடுத்த குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.. அவருக்கு வயது 82. ஆனால் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவருமான முலாயம் சிங் யாதவுக்கு உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
முலாயம் சிங்கின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும், மூச்சுவிட முடியாததால் அவருக்கு செயற்கை சுவாசம் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் வழங்கப்படுவதாகவும் மருத்துவமனை தெரிவித்த நிலையில் இன்று காலை திடீரென காலமானார். இதற்கிடையே சொந்த ஊரான சைஃபாய் கிராமத்தில் இறுதி சடங்கு நடைபெறும் என முலாயம் சிங் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது ட்விட்டர் பக்கத்தில், உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவரது மரணம் சோசலிசத்தின் முக்கிய தூண் மற்றும் போராடும் சகாப்தத்தின் முடிவைக் குறித்தது. முலாயம் சிங்கின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்பதோடு, அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.
மேலும் ஸ்ரீ முலாயம் சிங் யாதவ் ஜியின் மறைவையொட்டி, உத்தரபிரதேச அரசு 3 நாட்கள் அரசு முறை துக்கம் அறிவிக்கிறது. அவரது இறுதி சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று தெரிவித்த முதல்வர் யோகி, இந்த துக்க நேரத்தில், முலாயம் சிங்கின் மகன் ஸ்ரீ அகிலேஷ் யாதவ் ஜியுடன் தொலைபேசியில் பேசி ஆறுதல் கூறினார்.
1989 – 91, 1993 – 95, 2003 – 2007 வரை உத்திரபிரதேச மாநில முதலமைச்சராக 3 முறை பதவி வகித்துள்ளார் முலாயம் சிங் யாதவ். தேவ கவுடா, ஐ கே குஜ்ராலின் மத்திய அமைச்சரவைகளில் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். 10 முறை எம்எல்ஏவாகவும், 7 முறை மக்களவை எம்பியாகவும், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர் முலாயம் சிங் யாதவ்..
उत्तर प्रदेश के पूर्व मुख्यमंत्री श्री मुलायम सिंह यादव जी का निधन अत्यंत दुखदायी है।
उनके निधन से समाजवाद के एक प्रमुख स्तंभ एवं एक संघर्षशील युग का अंत हुआ है।
ईश्वर से दिवंगत आत्मा की शांति की कामना व शोकाकुल परिवार एवं समर्थकों के प्रति संवेदना व्यक्त करता हूँ।
— Yogi Adityanath (@myogiadityanath) October 10, 2022
शोक की इस घड़ी में उनके पुत्र श्री अखिलेश यादव जी से दूरभाष पर वार्ता कर अपनी शोक संवेदनाएं व्यक्त कीं।
— Yogi Adityanath (@myogiadityanath) October 10, 2022