ஆப்கானிஸ்தானின் இடைக்கால ஆட்சியின் துணை பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட முல்லா பரதார் எங்கிருக்கிறார்? என்பது தொடர்பில் தலிபான்கள் தகவல் வெளியிட்டுள்ளார்கள்.
ஆப்கானிஸ்தானின் இடைக்கால ஆட்சியின் துணை பிரதமராக, தேர்ந்தெடுக்கப்பட்ட முல்லா பரதார், தற்போது எங்குள்ளார்? என்பது தொடர்பில் சந்தேகம் எழுந்தது. இந்நிலையில், காபூல் மற்றும் தோஹாவில் இருக்கும் தலீபான்கள் இது தொடர்பில் தெரிவித்திருப்பதாவது, கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவில் ஜனாதிபதிஅரண்மனையில், கலீல் ஹக்கானி மற்றும் முல்லா பரதார், இருவருக்கும் இடையே மோதல் அதிகரித்தது.
அதன் பின்பு, அவர்களின் ஆதரவாளர்களும் சண்டையிட்டனர். இதனால் வருத்தமடைந்த முல்லா பரதார், கந்தஹார் நகரத்திற்கு சென்றுவிட்டார். நாட்டில், புதிய ஆட்சி அமைப்பதில் அவருக்கு உடன்பாடு இல்லை. தலிபான்கள் மட்டும் உள்ள அமைச்சரவை அவருக்கு பிடிக்கவில்லை என்று கூறியிருக்கிறார்கள்.