முல்லை பெரியார் அணையில் இருந்து பதினெட்டாம் கால்வாயில் நாளை தண்ணீர் திறக்கப்படும் நிலையில் தண்ணீர் திறக்கப்படும் கால அளவை 30 நாட்களில் இருந்து 120 நாட்களாக உயர்த்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நாளை 18ம் கால்வாயில் தண்ணீர் திறக்கப்படுவது குறித்து விவசாயிகளுடன் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சிந்தனைசேரி கிராமத்தில் கலந்து ஆலோசனை நடத்தினார்.
தற்போது 30 நாட்களுக்கு மட்டும் தண்ணீர் திறப்பதால் தேவாரம் பகுதி வரையிலான விவசாயிகள் மட்டும் பயன் பெறுவதாகும் தேவாரத்தை அடுத்து உள்ள 35 கிராமங்களுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை எனவும் இக் கூட்டத்தில் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே மற்ற கால்வாய்கள் திறந்து விடபடுவதை போல 18ஆம் கால்வாயிலும் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.