Categories
தேனி மாவட்ட செய்திகள்

உச்சநீதிமன்ற உத்தரவு… 3 பேர் கொண்ட மத்திய குழு… முல்லை பெரியாறு அணையில் ஆய்வு…!!

உச்சநீதிமன்ற பரிந்துரையின் படி 3 பேர் கொண்ட குழு நேற்று முல்லை பெரியாறு அணையில் ஆய்வு மேற்கொண்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு பணிகளை மூன்று பேர் கொண்ட குழு கண்காணித்து வருகின்றது. இந்தக் குழுவிற்கு கீழ் 5 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த 5 பேர் கொண்ட குழு மூன்று மாதத்திற்கு ஒருமுறை அணையில் நீர்க்கசிவு, நீர்மட்டம், பாதுகாப்பு போன்றவைகளை ஆய்வு செய்து மூன்று பேருடைய குழுவிற்கு அறிக்கை தாக்கல் செய்யபாடுவதுண்டு. அதன்பின் 3 பேர் கொண்ட குழுவானது ஆண்டுதோறும் அணையை பார்வையிட்டு பராமரிப்பு பணிகளை குறித்து ஆலோசனை வழங்கி வருகின்றது.

இந்த மூன்று பேர் கொண்ட குழுவில் தமிழக அரசின் பிரதிநிதியாக பொதுப்பணித்துறை செயலாளர் மணிவாசகன், கேரள அரசு பிரதிநிதியாக நீர்வள ஆதார அமைப்பு செயலாளர் ஜோஸ் மற்றும் தலைவராக மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் வில்சன் ராஜ் ஆகியோர் உள்ளனர். இந்த மூன்று பேர் கொண்ட குழு தமிழக மற்றும் கேரள அதிகாரிகளுடன் இன்று அணையில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்த ஆய்வு கடந்த வருடம் ஜனவரி 28ஆம் தேதி நடைபெற்ற பிறகு இந்தாண்டு நேற்று நடைபெற்றுள்ளது. இது உச்ச நீதிமன்ற உத்தரவிற்கு பிறகு 14வது முறையாக ஆய்வு மேற்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்பதால் பேபி அணையை பலப்படுத்த வேண்டும், ஐந்து ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள “தமிழ் அன்னை” படகை தேக்கடி ஏரியில் இயக்க வேண்டும், வல்லக்கடவு பாதையை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதால் மூன்று பேர் கொண்ட குழு மேற்கொள்ளும் இந்த ஆய்விற்குப் பிறகு இந்த கோரிக்கைகள் வலியுறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |