Categories
சினிமா தமிழ் சினிமா

“மூளையில் பல கட்டிகள்”…. உயிருக்கு போராடும் பிரபல நடிகை…. மருத்துவமனையில் கவலைக்கிடம்….!!!!!

பெங்காலி மொழியில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ஐந்திரில்லா. இவர் போலே பாபர் பர்‌ கரோகா, ஜியோன் கதி, ஜிபோன் ஜோதி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பாக புற்றுநோய் ஏற்பட்ட நிலையில் அதிலிருந்து விடுபட்ட நிலையில் மீண்டும் ஒருமுறை புற்றுநோய் ஏற்படவே சிகிச்சை பெற்று குணமடைந்தார்.

அதன் பிறகு ஐந்திரில்லா படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ஹவுரா பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அவருக்கு மூளையில் பல கட்டிகள் இருப்பது தெரிய வந்தது.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ஐந்திரில்லா தற்போது திடீரென ஹோமா நிலைக்கு போனதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதனால் வென்டிலேட்டர் உதவியுடன் அவர் தொடர்ந்து மருத்துவர்களால் கவனிக்கப்படுகிறாராம். மேலும் அவரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதால் எப்போது என்ன நடக்கும் என்று தெரியாது என மருத்துவர்கள் கூறியதால் அவருடைய ரசிகர்கள் மிகுந்த கவலையில் இருக்கிறார்கள். ‌

Categories

Tech |