பல ஆண்டுகளுக்கு பிறகு ஏரியில் நீர் முழுமையாக நிரம்பியதை விவசாயிகள் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அன்னமங்கலத்தில் இருக்கும் பெரிய ஏரியானது பல ஆண்டுகளாக முழு கொள்ளளவை எட்டாமல் இருந்துள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள் தண்ணீர் கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக இந்த ஏரி முழு கொள்ளளவை எட்டியதோடு, உபரி நீர் வெளியேறுகிறது.
இதனால் அங்கு வசிக்கும் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் விவசாயிகள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.