கன்னியாகுமரியில் முழு ஊரடங்கை முன்னிட்டு கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.
தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மீண்டும் ஒரு வாரம் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என தமிழக முதல்வர் திரு முக. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்நிலையில் முழு ஊரடங்கு என்பதனால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் செல்வதற்கு நேற்று அனைத்து கடைகள் மற்றும் பேருந்துகள் இயங்குவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
இதனையடுத்து கன்னியாகுமரியில் நேற்று அனைத்து கடைகளும் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வதற்கு கடை வீதிகளில் குவிந்துள்ளனர். இவ்வாறு பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் மாவட்டம் முழுவதும் நேற்று பரபரப்புடன் இருந்துள்ளது.