Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (21.04.2020 ) நாள் எப்படி இருக்கும்…? ராசிபலன் இதோ..!!

இராகு காலம் மதியம் 03.00-04.30

21.04.2020,சித்திரை 8,செவாய்க்கிழமை.

எம கண்டம் காலை 09.00-10.30

குளிகன் மதியம் 12.00-1.30

இன்றைக்கு ராசிபலன் –21.04.2020

மேஷம்

இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகளால் மன அமைதி குறையும்.உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் வழியில் நற்செய்திகள் வந்து சேரும்.எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

ரிஷபம்

இன்று அனைத்து செய்திகளிலும் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள்.சிலருக்கு புதிய பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும்.வியாபாரத்தில் பொருளாதாரத்தின் நிலை மேலோங்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும்.

மிதுனம்

இன்று உடல் ஆரோக்கிய குறைபாட்டால் செலவுகள் உண்டாகும்.வியாபாரம் தொடர்பான புதிய முயற்சிகளில் ஒருசில தாமதத்துக்குப் பிறகு நன்மைகள் உண்டாகும்.திருமண முயற்சிகளில் தடை ஏற்படும்.மனைவிவழி உறவினர்களால் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

கடகம்

உங்களுக்கு இன்று பணவரவு சிறப்பாக இருக்கும்.குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும்.பிள்ளைகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும்.கடன் சுமை குறையும்.உத்யோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கும் தொழில் தொடர்பாக தொலைதூரப் பயணங்கள் செல்ல நேரிடும்.

சிம்மம்

உடல் ஆரோக்கியத்திலும் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படும்.உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வாகனங்களில் செல்லும் பொழுது கவனமாக செல்ல வேண்டும்.புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.மனநிம்மதி குறையும்.அடுத்தவர்கள் பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது.

கன்னி

குடும்பத்தில்  சுபநிகழ்ச்சிகள் நடைபெறும்.ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.தொழிலில் போட்டி பொறாமைகள் குறைந்து லாபம் அதிகரிக்கும்.நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும்.

துலாம்

இன்று உங்களுக்கு உத்யோகத்தில் மன மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.திருமணம் தொடர்பாக இருந்த தடைகள் விலகும்.தொழிலில் புதிய நண்பர்களின் சேர்க்கையால் லாபம் அதிகரிக்கும். பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். உறவினர் வழியாக நன்மை கிடைக்கும்.

விருச்சிகம்

உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.வெளியூர் பயணங்களால் நன்மை உண்டாகும்.வீட்டில் ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.பணிச்சுமை குறையும்.உடன் பிறந்தவர்கள் மூலம் நற்செய்தி கிடைக்கப் பெற்று குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.

தனுசு

இன்று உங்கள் காரியங்கள் சற்று தாமதமாகத்தான் முடியும். உறவினர்கள் வகையில் மனக்கசப்பு உண்டாகும்.திடீர் பணவரவு கிடைக்கும்.தேவைகள் பூர்த்தியாகும்.உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.எதிலும் நிதானமாக இருப்பது நல்லது.

மகரம்

இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகலாம்,சேமிப்பு குறையும்.சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.வியாபாரம் மந்தமாக இருந்தாலும் லாபம் பாதிப்படையாது.உத்யோகத்தில் சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.எந்த செயலிலும் கவனம் தேவை.

கும்பம்

குடும்பத்தில் இன்று எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.பிள்ளைகளால்
தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் நெருக்கடி இருந்தாலும் சக ஊழியர்களின் ஆதரவுக் கிடைக்கும். தொழிலில் இருந்த குழப்பங்கள் சற்று குறையும்.

மீனம்

இன்று நீங்கள் புதுப் பொலிவுடனும் புத்துணர்ச்சியுடனும் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் வெளி வட்டார நண்பர்கள் மூலம் நற்பலன்கள் கிடைக்கும் எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.

Categories

Tech |