திருவள்ளூர் மாவட்டம் எர்ணாவூரில் முழு ஊரடங்கு உத்தரவை மீறி அங்குள்ள கடற்கரையில் பொதுமக்கள் குளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஞாயிற்றுக் கிழமையான இன்று தளர்வுகளற்ற முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. பொது மக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் திருவள்ளூர் மாவட்டம் எர்ணாவூரில் இருக்கும் கடற்கரையில் குடும்பம், குடும்பமாக வந்து பொதுமக்கள் கடற்கரையில் குளித்து பொழுதை கழித்தனர். சமூக இடைவெளி இல்லாமல் முழுப் ஊரடங்கு உத்தரவை மீறி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கடலில் உற்சாகமாக குளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.