Categories
மாநில செய்திகள்

முழு ஊரடங்கு – வாகன நடமாட்டமின்றி வெறிச்சோடிய சாலைகள்…!!

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இன்று தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

சென்னை புறநகர் பகுதிகளான பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகள் முழு ஊரடங்கின் காரணமாக வெறிச்சோடி காணப்பட்டன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஜிஎஸ்டி சாலை வாகன நடமாட்டம் இன்றி காணப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் சத்திரம் பேருந்து நிலையம், காந்தி மார்க்கெட், மண்ணச்சநல்லூர், லால்குடி உள்ளிட்ட பல இடங்களில் பால், மருந்து மற்றும் மருத்துவ சேவைகளை தவிர அனைத்து கடைகளும் வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தன. புதுக்கோட்டை நகரில் கீழ ராஜவீதி, கீழராஜவீதி, பூங்கா நகர், டிவிஎஸ் கார்னர், பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், பிருந்தாவனம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தேவையின்றி வெளியில் வருவோரை எச்சரித்தது திருப்பி அனுப்பினர். தூத்துக்குடி மாவட்டத்திலும் பொதுமக்கள் ஊரடங்கிற்கு முழு ஒத்துழைப்பு அளித்தனர். முக்கிய சாலைகள் அனைத்தும் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழியில் முதல் களியக்காவிளை வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து சாலைகளும் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடின. பால் விற்பனை நிலையங்கள் மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்கள் மட்டுமே திறந்திருந்தன.

Categories

Tech |