Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இந்த ராசிக்காரர்” ரகசியங்களை பாதுகாத்திடுங்கள்”முழுப்பலன் இதோ..!!

மேஷம் ராசி அன்பர்களே, இன்று உங்களுடைய பேச்சு செயல் மாறுபட்ட வகையில் இருக்கும். நண்பரின் வழிகாட்டுதலில் நன்மையை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். அத்தியாவசிய செலவுகளுக்கு இன்று முன்னுரிமை கொடுப்பீர்கள். உணவுப்பொருட்கள் இன்று உடல் ஆரோக்கியத்தில், கவனம் இருக்கட்டும். பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பாக சில முக்கிய முடிவுகளை எடுக்க நேரிடும்.

பணவரவு இன்று தான் வந்து சேரும், கவலை வேண்டாம். இன்று  கணவன் மனைவிக்கு இடையே பேசும் போது கொஞ்சம் கவனமாக பேசுங்கள். எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் பேசி தீர்த்துக்கொள்ளலாம். பொறுமையுடன் கையாளுங்கள். முடிந்தால் இன்று ஆலயம் சென்று வாருங்கள் ரொம்ப சிறப்பாகவே இருக்கும். இன்று  மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் எந்தவித தடையும் இல்லாமல் சிறப்பாகவே இருக்கும். நல்ல முன்னேற்றம் ஆகவும் இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்தும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிஷ்ட திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 8

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் வெள்ளை நிறம்

ரிஷபம் ராசி அன்பர்களே, இன்று உங்களுடைய நல்ல செயல் நண்பர்களிடம் பாராட்டுகளை பெற்று கொடுக்கும். தொழிலில் கடுமையான உழைப்பினால் புதிய சாதனை புரிவீர்கள். உபரி பணவரவு சேமிப்பாகும். மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். அரசு சார்ந்த உதவிகளும் கிடைக்கும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுகள்  சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது மட்டும் நல்லது. அடுத்தவரின் உதவியும் உங்களுக்கு கிடைக்கும்.

புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். உங்களுடைய செயல்திறன் இன்று கூடும். திருமணம் ஆகாதவர்களுக்கும், திருமணத்திற்கான காத்திருந்தவர்களுக்கும் இன்று சிறப்பான பலனே  ஏற்படும். நட்பு வட்டம் விரிவடையும். நண்பர்களால் இன்று முக்கியமான பணி நிறைவேறும். இன்று  எதையும் செய்யும் பொழுது கொஞ்சம் ஆலோசனை செய்வது  நல்லது.

 திட்டமிட்ட காரியங்களை எதிர்கொள்ளுங்கள், கணவன் மனைவிக்கு இடையே பேசும்பொழுது நிதானம் இருக்கட்டும். இன்று மாணவச் செல்வங்கள் கல்வியில்  கடுமையாக உழைப்பார்கள், சிறப்பான பலனை பெறுவார்கள். இன்று முக்கியமான பணி நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லக்கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து  காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்ட திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்

மிதுனம்  ராசி நண்பர்களே, இன்று ஒரு முக தன்மையுடன் நடந்து கொள்வீர்கள். தாமதமாகி எளிதில் கொஞ்சம் நிறைவேறும், தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் விலகிச்செல்லும். அதிக அளவில் பணவரவு இருக்கும். பிள்ளைகளின் நல்ல செயல் உங்கள் மனதை மகிழ்விக்கும். இன்று குடும்பத்தில் பிரச்சினைகள் மட்டும் தலைதூக்கும், பார்த்துக்கொள்ளுங்கள். எதையும் நிதானமாக கையாண்டால் அனைத்து காரியங்களையும் நீங்கள் சிறப்பாகவே செய்து முடிக்க முடியும்.

கணவன் மனைவிக்கு இடையே அவ்வப்போது சின்னதாக கருத்து வேற்றுமை கொஞ்சம் ஏற்படலாம்,  தயவுசெய்து கைவிடுங்கள். அலட்சியப் போக்கை கைவிட்டால் இன்று சிறப்பான பலனை நீங்கள் பெற முடியும். திருமண முயற்சி செய்பவர்களுக்கும், திருமணமாகாதவர்களுக்கு இன்று சிறப்பான நாளாகத்தான் இருக்கும். திருமணத்தைப் பற்றிய பேச்சுவார்த்தை நடத்துங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும் நாளாகவே இருக்கும்.

ஆலயம் சென்று வாருங்கள் ரொம்ப சிறப்பாகவே இருக்கும். இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் எந்தவித தடையுமில்லாமல் சிறப்பான முன்னேற்றம் இருக்கும், வாய்ப்புகளும் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்ட திசை:-தெற்கு

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் இளம் மஞ்சள் நிறம்

கடகம் ராசி அன்பர்களே, இன்று மனதில் சோம்பலும் நிறைந்திருக்கும். முக்கியமான பணியை தாமதமின்றி நிறைவேற்றுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் உள்ள சிரமங்களை பிறரிடம் விவாதிக்க வேண்டாம். கூடுமானவரை எப்பொழுதும் நீங்கள் ரகசியங்களை தயவு செய்து பாதுகாத்து கொள்ளுங்கள்.  பயணத்திட்டத்தில் மாறுதல்களை செய்வீர்கள். இன்று ஆறுதல், வாக்கு, நம்பிக்கை கொடுக்கும்.

உறவினர்கள் நண்பர்களிடம் கொஞ்சம் கவனமாகவே பழகுங்கள். தேவையான உதவிகள் ஓரளவே வந்து சேரும். பொறுப்புகள் அதிகரிக்கும். பிள்ளைகள் உங்களுடைய ஆலோசனையை கேட்காமல் தன்னிச்சையாக முடிவுகள் எடுக்கக்கூடும். அதில் கொஞ்சம் கவனத்தை செலுத்துங்கள். அதுபோலவே மற்றவர்களின் பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது ரொம்ப நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் சிறப்பான முன்னேற்றம் இருக்கிறது.

படித்த பாடத்தை மட்டும் எழுதிப் பார்ப்பது ரொம்ப சிறப்பை கொடுக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள்,அனைத்து காரியமும்ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்ட திசை:-தெற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்

சிம்மம் ராசி அன்பர்களே, இன்று எதிர்பாராத வகையில் உங்களுக்கு நன்மைகள் நடக்கும் நாளாகவே இருக்கும். உங்களுடைய அணுகுமுறையில் மாற்றம் ஏற்படும். நல்ல பலன்கள் கிடைக்கும். அக்கம்பக்கத்தாரிடம்  அதிகம் அன்பு பாராட்டக் கூடும். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி சிறப்பாகவே இருக்கும். பணவரவும் திருப்திகரமாகவே இருக்கும். பெற்றோரின் தேவையை நிறைவேற்றுவீர்கள். இன்று  பிரச்சனைகள் அற்ற நாளாகவே இருக்கும். விவேகத்துடன் நடந்து கொள்வீர்கள்.

சிலரது காரியங்கள் உங்களுக்கு வெறுப்பை உண்டாகலாம். அதனால் நீங்கள் கொஞ்சம் கோபம் அடையலாம். எந்த விஷயங்களையும் தீர விசாரித்து பேசுவது நன்மையை கொடுக்கும். அதே போல நீங்கள் செய்யக் கூடிய காரியங்களில் கூட எந்தவித அலட்சியம் காட்டாமல் செய்வது ரொம்ப நல்லது. இன்று காதலர்களுக்கு சிறப்பான நாளாகத்தான் இருக்கும், காதல் கைகூடும். இன்று  மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் எந்தவித தடையுமில்லாமல் முன்னேற்றமாக செல்வார்கள்.

இன்று எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சிறப்பாகவே நீங்கள் கையாளக் கூடிய சூழல் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்ட திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் பச்சை

கன்னி ராசி அன்பர்களே, இன்று அறிமுகம் இல்லாதவர்களிடம் பொது விஷயத்தை பற்றி பேச வேண்டாம். கூடுமானவரை ரகசியங்களை பாதுகாத்திடுங்கள். தொழிலில் உருவாகின்ற குளறுபடிகளை நீங்கள் சரி செய்வது ரொம்ப அவசியம். பணவரவை விட இன்றைக்கு செலவு கொஞ்சம் கூடும். உணவு பொருட்களை தயவுசெய்து தரம் அறிந்து உண்ணுங்கள். எந்திரப் பிரிவு பணியாளர்கள் பாதுகாப்பில் கொஞ்சம் கவனம் வேண்டும்.

தீ, ஆயுதம் ஆகியவற்றை பயன்படுத்தும் பொழுது  ரொம்ப கவனமாக பயன்படுத்த வேண்டும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவது தவிர்க்க வேண்டும் யாருக்கும் எந்தவித பஞ்சாயத்துகளும் சொல்ல வேண்டாம். இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் நண்பர்களுடன் அனுசரித்துச் செல்வது ரொம்ப நல்லது. உத்தியோகத்தில் கடுமையான உழைப்பு இருக்கும்.

இன்று  எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படுங்கள். எந்த ஒரு விஷயத்திலும் அலட்சியம் காட்டாமல் இருந்தால் அது போதும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகி சிறப்பான முன்னேற்றம் இருக்கும். இருந்தாலும் படித்த பாடத்தை எழுதி பார்ப்பது ரொம்ப சிறப்பை கொடுக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்,

பச்சை நிறம் உங்களுக்கும் அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லை என்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்ட திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்

துலாம் ராசி அன்பர்களே, இன்று பணிகள் நிறைவேற முன்னேற்பாடுகள் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் உள்ள அனுகூலத் தன்மைகளை பிறரிடம் சொல்ல வேண்டாம். கூடுமானவரை ரகசியங்களை இன்று பாதுகாத்திடுங்கள். கூடுதல் பணவரவு குடும்ப தேவைகள் நிறைவேறும். வீட்டில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும் கூடும். பணியாளர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். இன்று  குடும்பத்தில் சுபகாரிய பேச்சுகள் நடக்கும்.

திருமண முயற்சிகள் சாதகமான பலனையே கொடுக்கும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் இருக்கட்டும். தடைகள் ஓரளவு விலகிச்செல்லும். பணவரவு திருப்தியைக் கொடுக்கும். காதலர்களுக்கு இன்று கைகூடும் நாளாகவே இருக்கும். இன்று சொன்ன சொல்லை காப்பாற்றுவதற்கு கடுமையாக உழைப்பீர்கள். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். உங்கள் மனதிற்கு பிடித்த பொருட்களை இன்று நீங்கள் வாங்கக்கூடிய நாளாகவே இருக்கும்.

பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் பரிபூரணமாக கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் செய்யுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்ட திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் ஆரஞ்சு நிறம்

விருச்சிகம் ராசி அன்பர்களே, இன்று உங்கள் மனம் செயலில் உற்சாகம் நிறைந்து காணப்படும். நண்பர்களிடம் கலை உணர்வுடன் பேசுவீர்கள். நகைச்சுவையாக அனைவரிடமும் பேசுவீர்கள். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி பணி நிறைவேறும். பண பரிவர்த்தனையில் திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். இன்று எதிரிகள் விலகிச் செல்லும், எல்லா துறைகளிலும் உங்களுக்கு லாபம் கிட்டும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவார்கள். வேலை பார்க்கும் இடத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பாகவே இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு நீடிக்கும். இன்று காதல் கைகூடும் நாளாகவே இருக்கும். இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை இருக்கும். படித்ததை மட்டும் எழுதிப் பாருங்கள், ரொம்ப சிறப்பாகவே இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்,ஆரஞ்சு நிறம் உங்களுக்கு  அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்ட திசை:-தெற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 1

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் நீல நிறம்

தனுசு ராசி அன்பர்களே, இன்று பணிகளை கூடுதல் கவனத்துடன் செய்ய நிறைவேற்றுவது நல்லது. தொழில் வியாபாரம் சூட்சுமங்களை பிறரிடம் சொல்ல வேண்டாம். கூடுமானவரை ரகசியங்களை இன்று பாதுகாத்திட வேண்டும். அளவான பணவரவு கிடைக்கும். குடும்பத்தின் பொருட்கள் வாங்கும் தேவை அதிகரிக்கும். மனைவியின் சேமிப்பு பணம் பயன்படும். இன்று ஓரளவு பொருளாதாரம் சீராக இருக்கும்.

நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வாய்க்கு ருசியான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். கணவன் மனைவி ஒருவரது பேச்சை மற்றவர் கேட்பதன் மூலம் நன்மை ஏற்படும். இன்று விருந்து விழாக்களில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. தூரதேச பயணம் செல்ல வேண்டி இருக்கும். பயணங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுப்பதாகவே இருக்கும். பணவரவில்  இன்று எந்தவித மாற்றமும் இல்லை.

இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் எந்தவித தடையும் இல்லாமல் சிறப்பாகவே இருக்கும். பெரும் சூழலும் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீலம் நிறம்

மகரம் ராசி அன்பர்களே, இன்று காரியங்களை திட்டமிட்டு செய்வீர்கள். இன்று சொந்த பணியை நிறைவேற்றுவதில் ஆர்வம் கொள்வீர்கள். நண்பர், உறவினர்களை எந்த விதத்திலும் குறை சொல்ல வேண்டாம். தொழில் உற்பத்தி விற்பனை சிறப்பாகவே இருக்கும். பணவரவை விட செலவு தான் இன்று கூடும். வெளியூர் பயணங்களில் திடீர் மாற்றம் செய்யக் கூடும். இன்று தெளிவான முடிவுகள் எடுப்பது மூலம் பிரச்சனைகளுக்கு முடிவு காண முடியும்.

அரசாங்கம் தொடர்பான விசயங்களில் சாதகமான போக்கு காணப்படும். இன்று  மரியாதையும், அந்தஸ்தும் உயரும். இருந்தாலும் மற்றவர்களுக்கு உதவிகள் செய்யும் பொழுது ரொம்ப கவனமாக செய்ய வேண்டும். சரியான நபரைத் தேர்ந்தெடுத்து அதற்கேற்றார்போல் பொறுப்பை ஒப்படையுங்கள். மிகச்சிறப்பாக பெறும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் எந்தவித தடையும் இல்லாமல் சிறப்பாகவே நடைபெறும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லை இன்று  சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்ட திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் இளம் நீலம் நிறம்

கும்பராசி அன்பர்களே, இன்று வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் உருவாகும். உண்மை நேர்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். தொழில் வியாபாரம் அபரிவிதமான வகையில் வளர்ச்சி இருக்கும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். முக்கிய வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவீர்கள். இன்று காரிய வெற்றி உண்டாகும்.

மனமகிழ்ச்சி கூடும். வழக்கு விவகாரங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். பொருளாதாரமும் ரொம்ப சிறப்பாகவே இருக்கும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். இன்றைய நாள் மனம் மகிழ்ச்சி பொங்கும் நாளாக தான் இருக்கும். இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். ஆஆசிரியரின் முழு ஒத்துழைப்பும் இருக்கும். சக மாணவர்களிடம் ஒத்துழைப்பும் பரிபூரணமாக கிடைக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது கருநீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், கரு நீல நிறம் உங்களுக்கு  மிகவும் அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லை இன்று  சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம் மற்றும் இளம் பச்சை நிறம்

மீனம் ராசி அன்பர்களே, இன்று உங்களுடைய பேச்சு செயலில் கொஞ்சம் முரண்பாடுகள் ஏற்படலாம். ஆலோசனை நன்மை பெற உதவும். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதுமானதாக அமையும். மாணவர்கள் பயிற்சியின் மூலம் சில தேவையான விஷயங்களை பெறமுடியும். இன்று வியாபார நிமித்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பெண்களுக்கு அனுபவம் பூர்வமாக அறிவைக் கொண்டு எதையும் சாதிப்பீர்கள்.

பெண்களுக்கு இன்றைய நாள் ரொம்ப சிறப்பான நாளாக அமையும். வீண் வாக்குவாதங்களை மட்டும் தயவு செய்து தவிர்த்து விடுங்கள். அக்கம்பக்கத்தினர் இடம் பேசும் பொழுது கொஞ்சம் நிதானத்தை கடைபிடியுங்கள். கூடுமானவரை இன்று கொடுக்கல், வாங்கல்களில் கொஞ்சம் கவனமாக இருங்கள். பண பரிவர்த்தனையும் கவனமாகவே நடந்து கொண்டால், எந்தவித பிரச்சனையும் இல்லாமல் தப்பித்துக்கொள்ளலாம்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிஷ்ட திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் இளம் நீலம் நிறம்

Categories

Tech |