பெங்களூரு அணிக்கு எதிரான தோல்வி குறித்து மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா கருத்து தெரிவித்துள்ளார்..
ஐபிஎல் தொடரின் 10ஆவது லீக் போட்டி துபாயில் நேற்று நடந்தது.. இந்த போட்டியில் ரோஹித் தலைமயிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், விராட் கோலி தலைமயிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதியது.. இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச முடிவு செய்தார்.. அதன்படி களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 202 ரன்கள் குவித்தது.. அதிகபட்சமாக டிவில்லியர்ஸ் 24 பந்துகளில் 55 ரன்களும், படிக்கல் 40 பந்துகளில் 55 ரன்களும், ஆரோன் பின்ச் 35 ரன்களில் 52 ரன்களும் எடுத்திருந்தனர்..
இதனையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்து இருந்தது.. அதாவது ஓப்பனிங் இறங்கிய கேப்டன் ரோகித் சர்மா 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.. அதனை தொடர்ந்து வந்த சூர்யகுமார் யாதவ், தொடக்க வீராக இறங்கிய டிகாக், ஹர்திக் பாண்டியா ஆகியோரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்..
இதனால் மும்பை அணி 11.2 ஓவரில் 78/4 ரன்கள் மட்டுமே எடுத்து திணறியது.. பின்னர் மறுமுனையில் பொறுப்பாக ஆடிய இஷாந்த் கிஷன் அணியின் ஸ்கோரை சீரான வேகத்தில் உயர்த்தினார்.. அதிரடி வீரர் பொலார்ட் கிஷானுடன் கைகோர்த்தார்.. இருவரும் சேர்ந்து மைதானத்தில் சிக்சர்களை பறக்கவிட்டனர்.. குறிப்பாக சவ்ரவ் திவாரிக்கு பதிலாக களமிறங்கிய கிஷான் 9 சிக்ஸர்களை பறக்க விட்டு மிரட்டினார்..
தனக்கு கிடைத்த முதல் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட கிசான் கடைசி ஓவரின் 5ஆவது பந்தை சிக்சருக்கு அடிக்க முயன்ற போது கேட்ச் ஆகி வெளியேறினார்.. கிஷான் 58 பந்துகளில்
99 ரன்கள் (9 சிக்ஸர், 2 பவுண்டரி) எடுத்து சோகமாக வெளியேறினார்.. இசுரு உதான வீசிய கடைசி ஓவரின் கடைசி பந்தில் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட, பொல்லார்ட் பவுண்டரிக்கு விரட்டினார்.. பொல்லார்ட் 24 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து இருந்தார்.. இதனால் ஆட்டம் சூப்பர் ஓவருக்கு மாறியது.. பின்னர் சூப்பர் ஓவரில் முதலில் மும்பை அணி பேட்டிங் செய்து 7 ரன்கள் மட்டுமே எடுத்தது.. பின்னர் 8 ரன்கள் என்ற வெற்றி இலக்கை எட்டிப் பிடித்தது பெங்களூரு..
இந்நிலையில் போட்டி முடிந்த பின் தோல்வி குறித்து பேசிய மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா, இப்போட்டி ஒரு மிகச் சிறந்த போட்டியாக அமைந்தது.. பேட்டிங் செய்ய தொடங்கியதில் இருந்தே போட்டி எங்களது கட்டுப்பாட்டிலேயே இல்லை.. இஷாந்த் கிசான் மற்றும் பொல்லார்ட் இருவருமே வழக்கம்போல அணிக்காக சிறப்பான இன்னிங்சை ஆடினார்கள்.. ஆனால் எங்களுக்கு தொடக்கம்தான் சரியாக அமையவில்லை.. 200 ரன்கள் போன்ற பெரிய இலக்கை சேஸ் செய்யும் போது தொடக்க ஓவர்களில் சிறப்பாக விளையாடி இருக்க வேண்டும்..
ஆனால் நாங்கள் 6 – 7 ஓவர்களில் 3 விக்கெட்டை பறிகொடுத்து விட்டோம்.. அதுவே எங்களுக்கு பெரிய பாதிப்பை கொடுத்தது.. ஆனாலும் எங்களிடம் 200 ரன்களை விரட்டி செல்ல பேட்டிங் பவர் உள்ளது.. கிஷான் கடைசி வரையில் போட்டியை கொண்டு சென்றார்.. ஆனாலும் பெங்களூரு அணி வென்றது.. சூப்பர் ஓவரில் வெல்ல கண்டிப்பாக அதிஷ்டம் தேவை.. சூப்பர் ஓவரில் பும்ரா 7 ரன்களை வைத்து சிறப்பாக பந்து வீசினார்.. விக்கெட்டுகளைஅந்த ஓவரில் நாங்கள் எதிர்பார்த்தோம்.. ஆனால் ஆர்சிபிக்கு பவுண்டரி கிடைத்து அவர்கள் போட்டியை வென்றார்கள் என்று அவர் கூறினார்.