Categories
தேசிய செய்திகள்

45 ஆண்டுகளாக இல்லாத வரலாறு காணாத மழையால் மூழ்கியது மும்பை…!!

மும்பையில் 45 ஆண்டுகளுக்கு பின்னர் வரலாறு காணாத அளவு மழை பதிவாகியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை அதி தீவிரமடைந்து , வெளுத்து வாங்கி வருகின்றது. கடந்த 5 நாட்களாக கொட்டும் கனமழையால் தலைநகர் மும்பை வெள்ள நீரில் தத்தளிக்கின்றது.நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ள நீரால் முழ்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. இதனால் நேற்று அம்மாநிலத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து 5 நாட்களாக இடைவிடாது பெய்து வரும் மழையால் இரயில் மற்றும் விமான போக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கியுள்ளது .

Image result for mumbai rainfall

மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் மக்கள் இடிபாடுகளில் சிக்கி , மழையால் பலியானோர் எண்ணிக்கை 38_ஆக அதிகரித்துள்ளது.  மும்பையில் ஒரே நாளில் 375.2 மி.மீ மழை பதிவாகியள்ள நிலையில் , இது 45 ஆண்டுகளுக்கு பின் பதிவாகிய அதிகப்படியான மழையின் அளவாக  கருதப்படுகின்றது. இந்திய வானிலை ஆய்வு மையமும் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 1974_ஆம் ஆண்டு மும்பையில் ஒரே நாளில் 375.2 மி.மீ மழை பதிவாகியது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |