Categories
கிரிக்கெட் விளையாட்டு

அண்ணன், தம்பி கடைசி கட்ட அதிரடி…. டெல்லிக்கு 169 ரன்கள் இலக்கு…!!

மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 168 ரன்கள் குவித்தது 

ஐ.பி.எல் 34 வது லீக் போட்டியில்  மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள்  விளையாடி வருகின்றன. இப்போட்டி டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை  தேர்வு செய்தார். இதையடுத்து மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மாவும், குவிண்டன் டிக்காக்கும் களமிறங்கினர்.

இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தனர். அதன் பிறகு ரோஹித் சர்மா 30 (22) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பென் கட்டிங் 2 ரன்னில் வெளியேற அவரை தொடர்ந்து குவிண்டன் டிக்காக்கும் 35 (27) ரன்களில் வெளியேறினார். அதன் பிறகு ஓரளவு தாக்கு பிடித்த சூர்ய குமார் யாதவ் 27 ரன்களில் வெளியேறினார்.

இதையடுத்து அண்ணன் க்ருணால் பாண்டியாவும், தம்பி ஹர்திக் பாண்டியாவும் இணைந்தனர். இருவரும்  கடைசி 5 ஓவரில் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். கடைசி ஓவரில் ஹர்திக் பாண்டியா 32 (15) ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் 20 ஓவர் முடிவில் மும்பை அணி 5 விக்கெட் இழந்து 168 ரன்கள் குவித்தது.

க்ருணால் பாண்டியா 37 (26) ரன்களிலும், பொல்லார்ட் 0 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். டெல்லி அணியில் அதிகபட்சமாக ககிசோ ரபாடா 2 விக்கெட்டுகளும், அமித் மிஸ்ரா, அக்சர் பட்டேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதையடுத்து டெல்லி அணி களமிறங்கி விளையாடி வருகிறது.

Categories

Tech |