இந்திய கிரிக்கெட் வீரரான பியூஸ் சாவ்லாவின், தந்தை கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் சுழல்பந்து வீச்சாளரும்,மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருபவருமான பியூஸ் சாவ்லாவின் தந்தை, கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் ,கொரோனா தொற்று பாதிப்பால் இவரது தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ,சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவரின் தந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுபற்றி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர் , என்னுடைய தந்தையின் இழப்பு எனக்கு மிகப்பெரிய இழப்பாக உள்ளது. ‘இனிமேல் என் தந்தை இல்லாத வாழ்க்கை, எனக்கு முன்புபோல இருக்காது’ என்றும் ‘என்னுடைய பலத்தின் தூண் போல விளங்கும், எனது தந்தையை இழந்து விட்டேன்’ என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். இவரது தந்தை இறப்புக்கு மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் மற்றும் வீரர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.