கடந்த 9 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணி தன்னுடைய முதல் போட்டியில் தோல்வியை சந்தித்து வருகிறது.
ஐபிஎல் போட்டி தொடர்களில் இடம்பெற்றுள்ள ,8 அணிகளில் ஒன்றான மும்பை இந்தியன்ஸ் அணி ,தலை சிறந்த அணியாக விளங்குகிறது. இந்த மும்பை இந்தியன்ஸ்அணி நடைபெற்ற ஐபில் போட்டிகளில் ,ஐந்து முறை சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றியது. மும்பை இந்தியன்ஸ் அணியானது ,தொடக்க ஆட்டத்தில் தன்னுடைய சிறப்பைப் வெளிப்படுத்தி இருக்காது. ஆனால் அடுத்தடுத்த ஆட்டங்களில் ,தன்னுடைய பலத்தை வழிகாட்டி மற்ற அணிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.
கடந்த 2013-ம் ஆண்டிலிருந்து நடைபெற்ற ஐபிஎல் தொடரின் ,முதல் போட்டியிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணி , ஒருமுறைகூட முதல் போட்டியில் வெற்றி பெற்றதில்லை. இதுபோலவே நேற்று நடைபெற்ற 2021 ஐபில் சீசனுக்கான ,முதல் போட்டியில் ஆர்சிபி அணியுடன் ,மும்பை இந்தியன்ஸ் மோதியது. ஆனால் இந்த முதல் போட்டியிலும் ,வழக்கம்போல மும்பை அணி தோல்வியை சந்தித்தது.