Categories
தேசிய செய்திகள்

தங்களது பணியாளர்களை கண்காணிக்க இன்ப்ராரெட் வெப்பநிலை சென்சாரை கண்டுபிடித்தது மும்பை கடற்படை

மும்பையில் உள்ள கடற்படை கப்பல்துறை அகச்சிவப்பு அடிப்படையிலான (Infrared based) வெப்பநிலை சென்சாரை வடிவமைத்து உருவாக்கியுள்ளது. நாவல் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க கப்பல்துறைக்குள் நுழையும் பணியாளர்களை திரையிடுவது அவசியம் என்று கடற்படை தெரிவித்துள்ளது. 285 ஆண்டுகள் பழமை வாய்ந்த மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படை கப்பல்துறையில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 20,000 பணியாளர்கள் வேலை செய்கின்றனர்.

இந்த நிலையில், கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருக்கும் பட்சத்தில் கப்பல்துறைக்குள் நுழையும் அனைவரையும் வெப்பநிலை பரிசோதனைக்கு உள்ளாக்குவது அவசியமாக உள்ளது. ஒரு நோயாளியை பரிசோதிக்க மிகவும் ஆரம்ப முறை உடல் வெப்பநிலையை சரிபார்ப்பது. தொற்றுநோயால் வெப்பநிலை கருவிகளின் பற்றாக்குறை அதிகம் இருப்பதைக் கருத்தில் கொண்டு ஒரு சென்சார் கருவியை உருவாக்க முடிவு செய்தது கப்பல்துறை.

அதிக எண்ணிக்கையிலான பற்றாக்குறை மற்றும் தேவையை சமாளிக்க, கப்பல்துறை (மும்பை) 0.02 டிகிரி செல்சியஸ் துல்லியத்துடன் தனது சொந்த கையடக்க ஐஆர் அடிப்படையிலான வெப்பநிலை சென்சாரை வடிவமைத்து உருவாக்கியுள்ளது. கப்பல்துறைக்கு நுழைவு வாயில் வழியாக வருபவர்களை திரையிட இந்த கையடக்க அகச்சிவப்பு வெப்பநிலை சென்சாரை வழங்கவுள்ளது. இதன் காரணமாக கடற்படை கப்பல்துறை வாசலில் நிற்கும் பாதுகாப்புக் காவலர்களின் சுமை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டு உபகரணங்களை வைத்து இந்த கருவி உருவாக்கப்பட்டது என்றும், இதற்காக ரூ.1000 மட்டுமே செலவு செய்ததாக கப்பற்படை கூறியுள்ளது.

Categories

Tech |