Categories
தேசிய செய்திகள்

மும்பையில் விபச்சாரத்தில் ஈடுபட்ட நடிகைகள்…. 3 பேர் கைது… அதிர்ச்சி சம்பவம்…!!!

பட வாய்ப்புகளை இழந்த நடிகைகளை விபச்சார தொழிலில் ஈடுபடுத்திய நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

மும்பை மாநிலத்தில் கொரோனா காரணமாக பட வாய்ப்பை இழந்த நடிகைகளை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இது குறித்து காவல்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது: “தானே மாவட்டம் நவாடா என்ற பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் விபச்சாரம் நடைபெறுவதாக தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் போலி வாடிக்கையாளர்களை அனுப்பி சோதனை செய்ததில் அங்கு விபசாரம் நடப்பது உறுதியானது.

இதையடுத்து அங்கு சென்று ஆய்வு செய்ததில் இரண்டு பெண்கள் விபசார தொழிலில் ஈடுபட்டிருந்தனர். மேலும் அவர்கள் படங்களில் நடித்து வரும் நடிகைகள் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதில் அவர்களை ஈடுபடுத்திய இரண்டு நபர்களை கைது செய்தோம். பட வாய்ப்பை இழந்த நடிகைகள் பணக் கஷ்டத்தில் இருக்கின்றனர். இவற்றை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இதுபோன்ற கும்பல் அவர்களை விபசார தொழிலில் ஈடுபட செய்கின்றது” என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |