ஐபிஎல் மும்பை அணியில் யார்க்கர் மன்னன் மலிங்காவுக்கு பதிலாக ஆஸ்திரேலிய வீரர் சேர்க்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா. யார்க்கர் என கூறினாலே முதலில் நினைவுக்கு வருவது மலிங்கா தான். இவர் ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணிக்காக விளையாடி வருகின்றார். மும்பை அணி வெற்றி பெறும்போது இவரது பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படும். ஆனால் இம்முறை நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டியில் மலிங்கா மும்பை அணியில் இடம்பெற மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் பேட்டின்சன் அணியில் சேர்க்கப்பட்ட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து மும்பை இந்தியன்ஸ் அணி கூறுகையில் “மலிங்கா வலிமைமிக்க தூணாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளங்கினார். ஆனால் இந்த முறை நாங்கள் அவரை மிஸ் செய்கிறோம். ஆனால் தற்போதைய சூழலில் அவர் குடும்பத்துடன் இருக்க வேண்டிய அவசியத்தை எங்களால் புரிந்துகொள்ள முடிகின்றது.. எங்களுடைய ஒரே குடும்பத்திற்கு ஆஸ்திரேலிய வீரரான ஜேம்ஸ் பேட்டின்சனை மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றோம்” என தெரிவித்துள்ளது.