Categories
கிரிக்கெட் விளையாட்டு

பரபரப்பான ஆட்டம்….. சூப்பர் ஓவரில் மும்பை அணி சூப்பர் வெற்றி….ஃப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி!!

ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றுள்ளது 

ஐ.பி.எல் 51 வது லீக் போட்டியில்மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதியது. இப்போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை  தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 162 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக குயிண்டன் டிகாக்   58பந்துகளில் 69 ரன்கள் எடுத்தார். மேலும் ரோஹித் சர்மா 24 ரன்களும், சூர்ய குமார் யாதவ் 23  ரன்களும் எடுத்தனர். ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக கலீல் அகமது 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

Imageஇதையடுத்து  163 ரன்கள் இலக்கை நோக்கி ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக விருத்திமான் சாஹாவும், மார்ட்டின் கப்திலும் களமிறங்கினர். நல்ல தொடக்கம் தந்த சாஹா 25(15) ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த மனிஷ் பாண்டே சிறப்பாக விளையாடினார். அதன் பிறகு கப்தில் 15 ரன்னில் ஆட்டமிழந்தார்.

Image

அதை தொடர்ந்து வில்லியம்சன் 3, விஜய் சங்கர் 12, அபிஷேக் சர்மா 2 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து வந்த மொஹம்மது நபியும், மனிஷ் பாண்டேவும் போராடினர். இருவரும்  கடைசி வரை ஆட்டத்தை  கொண்டு சென்றனர். கடைசி ஓவரில் ஹைதராபாத் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது.ஹர்திக் பாண்டியா ஓவரில்  நபி ஒரு சிக்ஸர் அடித்து ஆட்டமிழந்தார். இறுதியில் கடைசி பந்தில் 7 ரன் தேவைப்பட பரபரப்பான நிமிடத்தில் மனிஷ் பாண்டே சிக்ஸர் அடித்தார். இதனால் ஆட்டம் சூப்பர் ஓவராக மாறியது.

Image

இதையடுத்து சூப்பர் ஓவரில்  ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக மனிஷ் பாண்டேவும், மொஹம்மது நபியும் களமிறங்கினர். பும்ரா வீசிய முதல் பந்தில் 1 ரன் எடுத்து பாண்டே ரன் அவுட் ஆனார். அடுத்து வந்த கப்தில் 2 வது பந்தில்  1 ரன் எடுத்தார். 3வது பந்தில் நபி சிக்ஸர் அடிக்க 4வது பந்தில் போல்டானார். சூப்பர் ஓவரில் 2 விக்கெட் இழந்தால் ஆல் அவுட். இதனால் ஹைதராபாத் அணி சூப்பர் ஓவரில் 8  ரன்கள் எடுத்தது.

Image

இதையடுத்து  மும்பை அணியில் ஹர்திக் பாண்டியாவும், பொல்லார்டும் களமிறங்கினர். ரஷித் கான் வீசிய முதல் பந்திலேயே பாண்டியா சிக்ஸர் அடித்து ஆட்டத்தை தங்கள் வசம் திருப்பினார். அடுத்த 2 பந்துகளில் அடுத்தடுத்து சிங்கிள் எடுத்து மும்பை அணி வென்றது. இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி 16 புள்ளிகள் பெற்று 2வது இடத்திற்கு முன்னேறி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

Categories

Tech |