Categories
தேசிய செய்திகள்

மும்பை: தடுப்பூசி தட்டுப்பாடு… 41 தடுப்பு மையங்கள் மூடல்…. மக்கள் அவதி….!!

மும்பையில் தற்போது மருந்து இருப்பு நிலவரப்படி இரண்டு நாட்களுக்கு மட்டுமே தடுப்பூசி போட முடியும் என்று மும்பை மாநகராட்சி வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.

உலக நாடு முழுவதும் கொரோனா வைரசால் பரவி நிரம்பியுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த பலத்த  கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் இதனைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. இதனால் பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கையுடன் அதிக அளவில் தடுப்பூசிகள் போடும் பணியை தீவிரப்படுத்தி வருகின்றன. இது தொடர்பாக மும்பையில் கொரோனா தடுப்பு ஊசி ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த மாத தொடக்கத்தில் 120 மையங்களில் 75 மையங்கள் மட்டுமே செயல்படுகின்றன. மற்ற அனைத்து மையங்களும் தடுப்பூசி கட்டுப்பாட்டின் காரணமாக முழுமையாக மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டதால் தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு 135 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையால் நேற்றைய நிலவரப்படி 41 மையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் மும்பையில் உள்ள தடுப்பூசி மையங்களில் அதிக அளவில் கூட்டம் குவிந்தது. நேற்று ஒரே நாளில் மட்டும் 45,326 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதன்பின் மறுமை இருப்பு நிலவரப்படி நாளை வரை மட்டுமே தடுப்பு ஊசி போட முடியும் என்று மும்பை மாநகராட்சி வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.

 

Categories

Tech |