Categories
தேசிய செய்திகள்

மும்பையில் தடுப்பூசி தட்டுப்பாடு…. தடுப்பூசி மையங்கள் மூடல்….!!

 மும்பையில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டதால் நேற்று பல தடுப்பு மையங்கள் மூடப்பட்டுள்ளது. ஆர்வத்துடன் வந்த பொதுமக்கள் புலம்பியபடியே திரும்பிச் சென்றனர்.

மராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதிப்பு 2-வது அலையாக அதிவேகமாகப் பரவிக் கொண்டு வருகின்றது. இன்று மட்டும் கொரோனா பாதிப்பு 60 ஆயிரத்தை எட்டியுள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் தானாகவே முன்வந்து கொரோனா தடுப்பூசி போட ஆர்வமாக வருகின்றன. ஒரு நாளுக்கு  சுமார் 5 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதற்காக மும்பையில் மட்டும் 120 மையங்கள் அமைக்கப்பட்டு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டு மருந்து இருப்பு இல்லை என்று கூறி ஒரு நாளுக்கு முன்பாகவே தடுப்பூசி போடப்படும் மையங்களில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. அதனால் தடையின்றி தடுப்பூசி போடப்படுமா? என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்தது. இந்த நிலையில் நேற்று காலை மையங்கள் மூடப்பட்ட தகவலை அறியாத பொதுமக்கள் சந்தேகத்துடன் வந்து பார்த்தபோது பல மையங்கள் மூடப்பட்டிருந்தது. தடுப்பூசி போடப்படும் மையங்களின் முன்பு காவல்துறையினர் பாதுகாப்பிற்காக அமர்த்தப் பட்டிருந்தனர். தடுப்பு மருந்து இல்லாததால் பொதுமக்களை சுகாதார ஊழியர்கள், காவல்துறை திருப்பி அனுப்பியுள்ளனர்.

தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டதால் ஆர்வத்துடன் வந்த பொதுமக்கள் புலம்பியபடியே திரும்பிச் சென்றனர். மும்பையில் மொத்தமாக 120 மையங்கள் உள்ள நிலையில் 75 மையங்கள் மூடப்பட்டிருந்தது. அதில் பல தனியார் மையங்களும் அடங்கியுள்ளன. தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக மத்திய அரசுக்கும், மராட்டிய அரசுக்கும் இடையே முன்னதாகவே பெரும் வார்த்தை மோதல் ஏற்பட்டது. மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர், மராட்டியம் 5,00,000 டோஸ் தடுப்பூசியை வீண் செய்ததாக குற்றம்சாட்டியுள்ளார். அதற்கு சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே அவர்கள்மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி நிர்ணயிக்கப்பட்ட அளவிலிருந்து பாதி அளவு மருந்துதான் வீணானது என்று விளக்கம் அளித்துள்ளார்.

Categories

Tech |