இன்றைய மற்றொரு ஐபிஎல் போட்டியில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன.
இன்றைய ஐபிஎல் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணியும்,ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.இந்த போட்டிக்காக 2 அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.. முன்னதாக சன்ரைசர்ஸ், மற்றும் கொல்கத்தா அணிகள் மோதும் போட்டி மாலை 4 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் சற்று நேரத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற கொல்கத்தா பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. தற்போது சன்ரைசர்ஸ் அணி களமிறங்கி விளையாடி வருகிறது.