Categories
கிரிக்கெட் விளையாட்டு

சுழட்டி அடித்த மும்பை… வெளியேறிய CSK…. துவண்டு போன தோனி… பரபரப்பு பேட்டி …!!

மும்பை அணியுடனான தோல்வியில் நாங்கள் துவண்டு போயுள்ளதாக சிஎஸ்கே கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி பெற்றது. சென்னை அணி சீட்டுக் கட்டுகளை போல விக்கெட்டை பறிகொடுத்து, 10 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி அசத்தல் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணியின் பிளே ஆப் கனவு தகர்ந்தது. இதுவரை நடந்த அனைத்தை ஐபிஎல் தொடர்களிலும் வென்று பிளே ஆப்  சென்ற சென்னை அணி முதல் முறை வாய்ப்பை தவற விட்டது ரசிகர்களை மிகவும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இந்த போட்டி முடிந்து கேப்டன் எம்.எஸ்.தோனி பேசும் போது, பலரையும் கலங்க வைத்துள்ளார். நாங்க ரொம்ப காயப்பட்டு இருக்கின்றோம். எங்க அணியினரும் காயப்பட்டு மனம் துவண்டு போய் இருக்கின்றார்கள். ஆனாலும் அப்படியே இருக்க முடியாது, அடுத்த போட்டி விளையாடனும் எனவே எப்படி தோல்வி அடைந்தோம் ? எதனால் தோல்வி அடைந்தோம் ? என்பதில் தான் எங்களுடைய கவனம் எல்லாம் இருக்கிறது. நான் மட்டும் அல்லாமல் எங்களுடைய டீமும் அப்படித்தான் இருக்கிறது.

மொத்தத்தில் ஒரு விஷயமும் நன்றாக தெரிந்து விட்டது. இந்த வருஷம் எங்களுக்கான வருஷம் கிடையாது. ஏனென்றால் இந்த வருஷத்தை பொறுத்தவரை எங்கள் பேட்டிங்கும், பவுலிங்கும் ஒரு சிலர் மேட்சில் மட்டும் தான் சிறப்பாக இருந்தது. நீங்கள் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கிறோமோ இல்ல 10 விக்கெட் வித்தியாசத்தில் ஜெய்கிறோமா அது முக்கியம் கிடையாது. நாங்கள் முடிஞ்சவரைக்கும் முயற்சி செய்கிறோமே அது மட்டும் தான் முக்கியம்.

இந்த சீசனை பொருத்தவரைக்கும் அடுத்தடுத்து நாங்க விளையாட போற  மிச்சம் இருக்க கூடிய மூன்று போட்டிகளிலும் கண்டிப்பாக நன்றாக விளையாடுவோம் என்று தோனி சொல்லியுள்ளார்.

Categories

Tech |