மும்பை போலீஸ் கமிஷனர் மீது தொடர்ந்து கொண்டே இருக்கும் குற்றச்சாட்டு மாநில அரசு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த பரம்பீர் சிங் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டின் முன்பு வெடிகுண்டுடன் கார் நிறுத்தப்பட்டதாக கூறிய வழக்கை விசாரணை நடத்தி வந்தார். அந்த விசாரணையை தவறான முறையில் கையாண்டதாக கூறி அவரை ஊர்காவல் படைக்கு மாற்றியுள்ளனர்.
இதேபோல் மந்திரியாக இருந்த அனில் தேஷ்முக்கை மும்பையில் உள்ள ஹோட்டல் மற்றும் பார்களை மாதம்தோறும் ரூ .100 கோடி வசூலிக்க வேண்டும் என்று கட்டாயப் படுத்தியதாக முதல் மந்திரிக்கு கடிதம் எழுதியதை அடுத்து இக்குற்றச்சாட்டு காரணமாக அனில் தேஷ்முக்கை பதவியிலிருந்து ராஜினாமா செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து பரம்வீர் சிங் மீது இன்ஸ்பெக்டர் ஒருவர் பணியிடம் நீக்கம் செய்யப்பட்ட தன்னை மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்வதற்கு ரூ 2 கோடி லஞ்சம் கேட்டதாக பரம்வீர்சிங் மீது ஊழல் குற்ற சாட்டை தெரிவித்துள்ளார்.
இது குறித்த புகாரை மாநில அரசு டி.ஜி.பி. சஞ்சய் பாண்டேவை விசாரணை நடத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் ஏற்கனவே கார் வெடிகுண்டு விபத்து குறித்து விசாரணையை தவறான பாதையில் அழைத்துச் சென்றதற்காக அவர்மீது மாநில உள்துறை விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.