மும்பையில் வானில் அதிசயம் நிகழ்ந்து இருப்பதாக புகைப்படம் ஒன்று வெளியாகி, ஆய்வில் புகைப்படம் பொய்யானது என தெரியவந்தது.
வானத்தில் மேக கூட்டங்கள் அழகாக காட்சி தரும் படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அப்புகைப்படம் மும்பையில் எடுக்கப்பட்டதாக பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் அந்த வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்தபோது அது அமெரிக்காவை சேர்ந்த டிஜிட்டல் கலைஞர் பிரின்ட் ஷவ்நோர் என்பவரின் கற்பனையில் உருவான படம் என தெரியவந்தது. அது உண்மையான புகைப்படம் இல்லை என்பதும் தெரிந்தது.
பிரண்ட் ஷவ்நோர் கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் இந்தப் படத்தை பதிவிட்டுள்ளார்.எனவே இது மும்பை நகரில் எடுக்கப்படவில்லை என்பது உறுதியானது.