மும்பையில் விஜய் ரசிகர்கள் ‘மாஸ்டர்’ படம் பார்க்க வந்தவர்களுக்கு மரக்கன்று கொடுத்துள்ளனர்.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இன்று உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக மாஸ்டர் படம் வெளியாகியுள்ளது . இந்த படத்தை பார்த்த ரசிகர்களும் பிரபலங்களும் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் . பெரும்பாலான பாஸிட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டே இருப்பதால் மாஸ்டர் படம் ஹிட் அடிக்கும் என்பதில் சந்தேகமில்லை . இந்நிலையில் தமிழகத்தில் மட்டுமின்றி வட மாநிலங்களிலும் மாஸ்டர் படம் வெளியாகி வருகிறது .
அந்த வகையில் தற்போது மும்பையில் உள்ள ஒரு திரையரங்கில் மாஸ்டர் திரைப்படத்தை காண வந்த பொது மக்களுக்கு மரக்கன்று மற்றும் சானிடைசர் கொடுத்து அசத்தி உள்ளனர் விஜய் ரசிகர்கள் . இந்த வித்யாசமான வரவேற்பைப் பார்த்த பொதுமக்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர் . மாஸ்டர் படம் பார்க்க வந்தவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கையில் மரக்கன்றுகளை பெற்றுள்ளனர்.