பெருவில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பூமிக்கு அடியிலிருந்த அறை ஒன்றிலிருந்து தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் பதப்படுத்தப்பட்ட மம்மி ஒன்றை கண்டறிந்துள்ளார்கள்.
பெரு நாட்டில் லிமா என்னும் நகரம் அமைந்துள்ளது. இந்த நகருக்கு அருகேவுள்ள பகுதியிலிருந்து கை, கால்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் பூமிக்கு அடியிலிருந்த அறை ஒன்றிலிருந்து தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் பதப்படுத்தப்பட்ட மம்மி ஒன்றை கண்டறிந்துள்ளார்கள்.
அவ்வாறு கண்டறியப்பட்ட மம்மியுடன் பானைகளையும், உணவுப் பொருட்களையும் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் பூமிக்கு அடியிலிருந்த அறையிலிருந்து கண்டறிந்துள்ளார்கள். இதனையடுத்து ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த அந்த மம்மியை சுமார் 1,200 வருடங்களுக்கு முன்பாக சக்லா மலைப்பகுதியில் வசித்து வந்த ஆதிகால மக்கள் புதைத்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.