Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அம்மா.. அப்பா இல்லைனா இப்படி பண்ணுவீங்களா….? சித்தப்பா மீது 9ஆம் வகுப்பு மாணவி பாலியல் புகார்…!!

கோவையில் சித்தப்பா மீது ஒன்பதாம் வகுப்பு மாணவி பாலியல் புகார் அளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர் திண்டுக்கல் விடுதியில் தங்கி படித்து வருகிறார். அவரது தாய் இறந்துவிட தந்தையும் வேறு ஒரு பெண்ணின் மீது ஆசை கொண்டு மாணவியை கை விட்டு சென்று விட்டார்.

இதையடுத்து அவரை அவரது சித்தி தான் பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில் காது வலி காரணமாக திண்டுக்கல் விடுதியிலிருந்து சித்தி வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார் மாணவி. அப்போது அவர் தனியாக இருந்ததை உணர்ந்த சித்தப்பா காளிதாஸ் அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

இதையடுத்து மாணவி கூச்சலிட அக்கம்பக்கத்தினர் ஓடி வருவதற்கு முன்பாக காளிதாஸ் தப்பிச் சென்றுவிட்டார். பின் இதுகுறித்து கோவை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காளிதாஸ் மீது புகார் அளித்தார் மாணவி. இதையடுத்து வழக்கு பதிவு செய்த அதிகாரிகள் தலைமறைவான காளிதாசன் என்பவரை  ஆனைமலை அருகே கைது செய்த அதிகாரிகள் போக்சோ மற்றும் கொலை மிரட்டலின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மகள் ஸ்தானத்தில் வைத்து பார்க்கக்கூடிய பெண்ணை சித்தப்பாவே பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |