Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எதுனாலும் பேசி தீர்த்திருக்கலாம்… எரிந்து நாசமான ஆட்டோ… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

முன்விரோதம் காரணமாக ஆட்டோவிற்கு தீ வைத்த நபரை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முக்கூடல் பகுதியில் ஆட்டோ டிரைவரான குகன் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான ஆட்டோவை தான் வசிக்கும் தெருவில் ஓரமாக நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் முன் விரதத்தை மனதில் வைத்துக்கொண்டு அவரது உறவினரான விஜயராஜ் என்பவர் குகன் ராஜின் ஆட்டோவிற்கு தீ வைத்துள்ளார்.

இதனால் குகன் ராஜின் ஆட்டோ முற்றிலும் எரிந்து நாசமாகிவிட்டது. இதுகுறித்து முக்கூடல் காவல் நிலையத்தில் குகன் ராஜ் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விஜயராஜை வலை வீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |