Categories
சேலம் மாவட்ட செய்திகள்

முன் விரோதம் காரணமாக… விசைத்தறி உரிமையாளருக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

முன்விரோதம் காரணமாக விசைத்தறி உரிமையாளரை அடித்து கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள கரட்டூர் பகுதியில் விசைத்தறி உரிமையாளரான கிருஷ்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணனுக்கும், ஈரோட்டில் வசிக்கும் வெங்கடேஷ் மற்றும் மணிகண்டன் என்பவருக்கும் இடையே முன் விரோதம் ஏற்பட்டுள்ளது. இதனால் வெங்கடேஷ் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் இணைந்து கிருஷ்ணன் வசிக்கும் அதே பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். இந்நிலையில் கிருஷ்ணன், மணிகண்டன் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் இணைந்து மது குடித்துக் கொண்டிருக்கும் போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அந்த தகராறில் கோபமடைந்த வெங்கடேஷ் வீட்டிலிருந்த குக்கர் மூடியை எடுத்து கிருஷ்ணனின் தலையில் பலமாக அடித்து விட்டார். இதில் கிருஷ்ணன் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து வெங்கடேஷ் மற்றும் மணிகண்டன் இருவரும் இணைந்து கிருஷ்ணனின் உடலை ஒரு போர்வையினால் சுற்றி அதே பகுதியில் வசிக்கும் ராமநாதன் என்பவருடைய கிணற்றுக்குள் வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இதனையடுத்து வெங்கடேஷ் மற்றும் மணிகண்டன் நாம் இருவரும் காவல்துறையினரிடம் எப்படியாவது மாட்டிக்கொள்வோம் என்ற அச்சத்திலே தவித்துக்கொண்டு இருந்துள்ளனர்.

இந்நிலையில் வெங்கடேஷ் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் சேலத்திற்கு சென்று அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் கிருஷ்ணனை கொலை செய்து கிணற்றுக்குள் வீசியதை தெரிவித்துள்ளனர். அதன்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றுக்குள் இருந்து கிருஷ்ணனின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொலை செய்த குற்றத்திற்காக இரண்டு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.

Categories

Tech |