மதுரையில் முன்விரோதம் காரணமாக சகோதரர்கள் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை போடி லையன், பழைய காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் வெள்ளிக்கண் செந்தில் மற்றும் முருகன் இருவரும் உடன்பிறந்த சகோதரர்கள் ஆவர் இருவரும் உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சிக்காக தத்தநேரி பகுதிக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது 10 பேர் கொண்ட மர்ம கும்பல் இருவரையும் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த எஸ் எஸ் காலனி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அதில் கொலை செய்யப்பட்ட இருவர் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் அதே பகுதியில் வசித்து வரும் லோகேஷ் பாலா, சிவகுமார் ஆகியோரியிடன் முன்விரோதம் இருந்ததும் தெரியவந்தது. மேலும் உடல்களை கைப்பற்றிய காவல்துறையினர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் இக்கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.