Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“கணக்கில் காட்டப்படாத சொத்து”… முன்னாள் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் எடுத்த விபரீத முடிவு….!!

தமிழகத்தின் முன்னாள் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை மாவட்டத்திலுள்ள வேளச்சேரி புதிய தலைமை செயலகம் காலனி 2-வது தெருவில் வெங்கடாசலம் என்பவர் வசித்து வந்தார். இவர் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் ஊழல் செய்ததாகவும், சொத்து சேர்த்ததாகவும் வெங்கடாசலம்  மீது லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் 24-ம் தேதியன்று வெங்கடாச்சலதுக்கு சொந்தமான இடங்களில் காவல்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத 13 லட்சம், 11 கிலோ தங்கம், 15 கிலோ சந்தன மரக்கட்டைகள் மற்றும் 6 கிலோ வெள்ளி பொருட்கள் போன்றவை சோதனையில் கண்டறியப்பட்டது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் வெங்கடாசலம் தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதனை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின் ராயப்பேட்டை மருத்துவமனையில் வெங்கடாசலம் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனிடையில் வெங்கடாசலம் இறந்ததற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சம்பவத்தன்று வெங்கடாசலத்தை தொடர்பு கொண்டு ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களுடன் வந்து விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கூறியதாக தெரிகிறது. ஆகவே விசாரணைக்கு பயந்துபோன வெங்கடாசலம் தற்கொலை செய்தாரா (அ) வேறு காரணம் இருக்கிறதா என்று காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வெங்கடாசலம் தற்கொலை செய்வதற்கு முன் யாரிடம் பேசி உள்ளார் என அறிய அவரது செல்போனை சைபர் கிரைம் காவல்துறையினர் ஆராய திட்டமிட்டுள்ளனர்.

Categories

Tech |