முந்தானை முடிச்சு ரீமேக்கை இயக்கவுள்ள இயக்குனர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் கடந்த 1983 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் முந்தானை முடிச்சு . ஏ.வி.எம் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் பாக்யராஜ் இயக்கி நடித்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது . தற்போது 36 வருடங்களுக்குப் பின் இந்த படம் ரீமேக் செய்யப்பட இருப்பதாக கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானது . இந்த படத்தில் பாக்யராஜ் கதாபாத்திரத்தில் நடிகர் சசிகுமார் மற்றும் ஊர்வசி கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். மேலும் இந்த படத்தில் பாக்யராஜ் கதை, திரைக்கதை, மற்றும் வசனம் எழுதியுள்ளார் .
இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜே.எஸ்.பி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை சசிகுமாரின் சிஷ்யனும் பிரபல இயக்குனருமான எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது . ஏற்கனவே சசிகுமார் -எஸ்.ஆர். பிரபாகரன் கூட்டணியில் வெளியான சுந்தரபாண்டியன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது . மேலும் இவர்கள் கூட்டணியில் உருவாகியுள்ள ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ படம் விரைவில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.