Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பயணிகளுக்கு இடையூறா இப்படி போடாதீங்க… நாகையில் நகராட்சி ஆணையர் அதிரடி நடவடிக்கை..!!

நாகையில் பயணிகள் நடைபாதைக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு இடங்களை அகற்றும் பணியில் நகராட்சி ஆணையர்கள் ஈடுபட்டுள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக இருந்த ஆக்கிரமிப்பு இடங்களை அகற்றும் பணியில் நகராட்சி ஆணையர்கள் ஈடுபட்டனர். நாகை பேருந்து நிலையத்தில் பழகடைகள், ஓட்டல்கள், டீக்கடைகள் என பல கடைகளும் உள்ளனர். இதில் பயணிகள் நடப்பதற்கு இடையூறாக பல கடைகள் நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று நகராட்சி அதிகாரிகளுக்கு சிலர் புகார் அளித்த வண்ணம் இருந்துள்ளனர்.

இதையடுத்து நேற்று முன்தினம் நகராட்சி பொறியாளர் வசந்தன், நகராட்சி ஆணையர் ஏகராஜ் மற்றும் சில அதிகாரிகள் பேருந்து நிலையத்தை ஆய்வு செய்தனர். அப்போது பயணிகள் நடைபாதைக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக இருந்த கடைகளை அகற்றுமாறு நகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் அதை அகற்றவில்லை என்றால் நகராட்சி பணியாளர்கள் கொண்டு ஆக்கிரமிப்பு பகுதிகள் அகற்றப்படும் என்று அவர்கள் கூறியுள்ளனர். அதற்கு சில கடைக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது நகராட்சி ஆணையர் நகராட்சி சார்பில் வழங்கப்பட்ட இடத்தில் கடை வைப்பதற்கே வரி செலுத்தப்பட்டு வருகிறது. வரியை செலுத்தாமல் நிலுவையில் வைத்திருப்பவர்கள் விரைவில் விரைவில் வரி செலுத்துமாறு அவர் கூறியுள்ளார். மேலும் கடைகளின் உரிமம் புதுப்பிக்க படாமல் இருந்தால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |