பழக்கடைகளை சேதப்படுத்திய வாணியம்பாடி நகராட்சி ஆணையர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஊடகங்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. இது குறித்து, நகராட்சி நிர்வாக ஆணையர், வாணியம்பாடி நகராட்சி ஆணையர் இரண்டு வாரங்களில் பதிலளிக்க மாநில மனித உரிமை ஆணைய பொறுப்பு தலைவர் ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
வாணியம்பாடியில் கடந்த 12ம் தேதி காலையில் பழவியாபாரம் செய்து கொண்டிருந்தவர்களின் பழங்களை வீதியில் வீசியும், தள்ளுவண்டிகளை நகராட்சி ஆணையர் கவிழ்த்து விட்டார். இது தொடர்பான செய்திகள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகின. ஊடகங்களில் வெளியிடப்பட்டன. இந்த செய்திகளின் அடிப்படையில் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளனர்.
இந்த வழக்கு சம்பந்தமாக 2 வாரங்களில் நகராட்சி நிர்வாக ஆணையர் மற்றும் வாணியம்பாடி நகராட்சி ஆணையர் இருவரும் பதிலளிக்க வேடனும் என மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஊடங்கு காலத்தில் விதிமுறைகளை மீறி பழக்கடைகள் திறக்கும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக அவர்களின் வண்டிகளையும், பழங்களையும் சேதப்படுத்தியது ஏன் என்பது குறித்து விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.