தமிழகத்தில் முதல்முறையாக நகர சபை கூட்டம் நடத்து நடைபெற இருக்கிறது. பல்லாவரம் அருகே உள்ள பம்மல் ஆறாவது வார்டு நகர சபை கூட்டத்தில் மக்கள் குறைகளை முதலமைச்சர் நேரடியாக பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஒவ்வொரு வார்டுக்கும் ஒன்பது உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டு இருக்கக்கூடிய நிலையில், அதில் கவுன்சிலர் தலைவராக இருந்து வருகிறார்கள்.
மக்கள் குறைகள் கேட்கப்படும் கிராம சபை கூட்டத்தை பொறுத்தவரை அங்கு நடைபெற்று வரக்கூடிய பணிகள் மற்றும் அவர்கள் கோரிக்கை என்று கேட்டு அரசினுடைய கவனத்திற்கு கிராம சபை கூட்டத்தில்நிறைவேற்றப்படக் கூடிய தீர்மானங்கள், அதற்கான திட்டங்கள் நிறைவேற்றப்படும். அதனடிப்படையில் தான் நகரப்பகுதியில் இருக்கக்கூடிய மக்களுடைய குறைகளை கேட்டு அவர்களுக்கான குறைகளை நிவர்த்தி செய்யக்கூடிய வகையில் கிராம சபை கூட்டம் போன்று நகர சபை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
நவம்பர் ஒன்றாம் தேதி நடைபெறக்கூடிய அந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னை பல்லாவரம் அருகே பம்மல் ஆறாவது வார்டு நேரடியாக சென்று பொது மக்களுடைய குறைகளை கேட்டறிய இருப்பதாக கூறப்படுகிறது.