சென்னையில் பல்லாவரம் நகராட்சி சுகாதார ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பை அடுத்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சுகாதார ஆய்வாளர் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் தான் பாதிப்பு தினந்தோறும் ஆயிரக்கணக்கில் அதிகரித்து வருகிறது.
சென்னையில் நேற்று புதிதாக 1,322 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 38,327 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 21,098 பேர் குணமடைந்துள்ளனர். இந்த நிலையில் 16,699 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் மட்டும் நேற்றுவரை கொரோனோவால் 529 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், சென்னை தாம்பரத்தில் வணிகர் சங்க நிர்வாகியின் மனைவி கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு முதல் இன்று காலை வரை மொத்தம் 28 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.