Categories
மதுரை மாவட்ட செய்திகள்

முனியாண்டி கோவில் திருவிழா….. இலவச பிரியாணி….. சட்டி.. குண்டாவுடன் அலைமோதிய கூட்டம்….!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே முனியாண்டி கோவில் நடைபெற்ற பிரம்மாண்ட திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள முனியாண்டி சுவாமி கோவிலில் 85வது  ஆண்டு பிரியாணி திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும்  பிரபல முனியாண்டி விலாஸ் ஹோட்டல் நடத்திவரும் உரிமையாளர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

இதனையொட்டி நடத்தப்பட்ட ஊர்வலத்தில் பெண்கள் தேங்காய் பழம், பூ தட்டுகளை தலையில் சுமந்தபடி கோவிலுக்குள் கொண்டு சென்று பூஜை செய்தனர். விழாவின் முடிவாக பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 150 ஆடுகள் மற்றும் 300 க்கும் மேற்பட்ட கோழிகள் முனியாண்டி சுவாமி கோவிலில் பலியிடப்பட, அதன்பின்  கோவில் வளாகத்தில் பிரியாணி சமைக்கப்பட்டது.

இதையடுத்து கோயில் வளாகத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்த கிராம மக்களுக்கு அசைவ பிரியாணி விநியோகம் செய்யப்பட்டது. இதனை பெற மக்கள் போட்டி போட்டு முந்தி அடித்ததால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தை ஒழுங்கு படுத்தி பிரியாணி விநியோகம் செய்தவர்களுக்கு உதவினர். ஆனாலும் கட்டுக்கடங்காத கூட்டத்தினால்  அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Categories

Tech |