ஊழல் வழக்கில் சாட்சி சொல்ல மறுத்ததால் முன்னாள் தென்னாப்பிரிக்கா அதிபருக்கு 15 மாதங்கள் சிறை தண்டனை அளித்து அரசியல் சாசன கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜுமா ஆவார். ஜுமா பதவி வகித்த ஒன்பது ஆண்டு ஆட்சிக் காலத்தில் நடந்த ஊழல் வழக்கில் சாட்சி சொல்ல மறுத்ததால் அவரின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்த நாட்டின் அரசியல் சாசன கோர்ட் அவருக்கு 15 மாதங்கள் சிறை தண்டனை விதித்து கடந்த 29ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் வரை சரணடைய கோர்ட்டில் கெடு அளிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து நேற்று இரவு அவர் சரண் அடைந்ததை தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டார். இது குறித்து அவரின் மகள் டுது ஜூமா சம்புட்லா வெளியிட்டுள்ள பதிவில்” என் தந்தை சிறைக்கு சென்றாலும் நல்ல உற்சாகத்துடன்இருக்கிறார்” என்றும் மேலும் ஜேக்கப் ஜூமா அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில் ” ஜுமா சிறை வாசத்திற்கு செல்ல முடிவு செய்துள்ளார் “எனவும் கூறப்பட்டுள்ளது.