இந்திய பேட்மிட்டன் ஜாம்பவானான பிரகாஷ் படுகோனே கொரோனா தொற்றிலிருந்து , குணமடைந்துள்ளார்.
இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸின் இரண்டாம் அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது . இதனால் தொற்றால் பாதித்தவர்களின், தினசரி எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ளது. நோயினால் பாதிக்கப்பட்ட மக்கள் , மருத்துவமனைகளில் இடமில்லாமல் தவித்து வருகின்றனர். மருந்துகள் மற்றும் ஆக்சிசன் தட்டுப்பாட்டால் மக்கள் உயிரிழந்து வருகின்றனர்.இந்நிலையில் இந்திய பேட்மிண்டன் ஜாம்பவானான பிரகாஷ் படுகோனே (வயது 65) கடந்த 10 நாட்களுக்கு முன் ,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரது குடும்பத்தினருக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் , வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தன.
ஆனால் அவருக்கு காய்ச்சல் குறையாத நிலையில், பெங்களூரில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்கு பிறகு தற்போது ,கொரோனா தொற்றிலிருந்து அவர் மீண்டுள்ளார். இன்னும் ஒருசில தினங்களில் அவர் வீடு திரும்புவார் என்று அவருடைய நண்பரும், பேட்மிட்டன் அகாடமி இயக்குனரான விமல்குமார் தெரிவித்துள்ளார். பேட்மிட்டன் ஜாம்பவானான பிரகாஷ் படுகோனே , ஆல் -இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற, முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அதுபோல கடந்த 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் , வெண்கலப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார்.