மதுரையில் கணவர் மற்றும் பெற்ற பிள்ளையை ஒதுக்கித் தள்ளிவிட்டு முன்னாள் காதலனை பட்டதாரி பெண் தேடி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே செருவாவிடுதி தெருவில் போத்தியப்பன் வசித்து வந்தார் அவருக்கு அருள்செல்வி என்றொரு மகள் வயது 24 இவள் பட்டதாரி படிப்பை முடித்தவர். அருள் செல்விக்கும் அப்பகுதியை சேர்ந்த ராமையன் மகன் முருகானந்தம் என்பவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது அவர்களுக்கு மூன்று வயது தன்சிகா என்றொரு மகளும் உள்ளார்.
அருள்செல்வி மதுரையில் தன் தோழியின் திருமணத்திற்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். அதன்பிறகு அருள்செல்வி வீடு திரும்பாத காரணத்தினால் பயம் அடைந்த கணவர் மற்றும் அவரது உறவினர்கள் திருச்சிற்றம்பலம் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர்.
இதனை போலீசார் விசாரணை நடத்திய போது மதுரை மாட்டுத்தாவணியில் பஸ் நிலையம் அருகில் உள்ள மருத்துவமனையில் பழக்கடை வைத்திருப்பது தெரியவந்தது இதனை தெரிந்து உறவினர்கள் மற்றும் காவல்துறை சென்று விசாரித்ததில் அவள் முன்னால் காதலனுடன் இருப்பது தெரியவந்தது. திருமணத்திற்கு முன்பு அவள் காதலித்தது தெரியவந்தது.
இந்நிலையில் அருள்செல்வி கணவனும் வேண்டாம் பிள்ளையும் வேண்டாம் எ ன்று பிடிவாதமாக கூறிவிட்டு முன்னாள் காதலனுடன் சென்றாள்.அவளது உறவினர்கள் எவ்வளவு பேசியும் அவள் மனம் மாறவில்லை.