மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் சிவாஜி ராவ் பாட்டீல் உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் மூத்த காங்கிரஸ் தலைவரான சிவாஜி ராவ் பாட்டீல் நிலங்கேகர் என்பவர் மரத்வாடாவின் லத்தூர் பகுதியில் வசித்து வருகிறார். இவர் அம்மாநிலத்தில் 1985-1986 வரையில் முதல்வராக இருந்துள்ளார். 1985ஆம் ஆண்டில் எம்டி தேர்வு எழுதி இருந்த இவரது மகள் மற்றும் நண்பர்களுக்கு கூடுதல் மதிப்பெண் பெற்று தேர்வாகும் வகையில் மோசடி செய்வதற்கு உதவியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து இவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.மும்பை உயர்நீதிமன்றம் அச்சமயத்தில் கடுமையான விதிகளை இவருக்கு எதிராக விதித்தது.சில நாட்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த இவர் சில நாட்களில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து சிறுநீரக தொடர்பான சிக்கல் மீண்டும் இவருக்கு ஏற்பட்டதால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இவரின் மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரின் இறுதி சடங்குகள் மகாராஷ்டிராவின் லத்தூர் மாவட்டத்தில் இருக்கின்ற நிலங்கா நகரில் இன்று நடைபெற உள்ளது. இவரின் மகன் சம்பாஜி பாட்டீல் பாஜக எம்எல்ஏ மற்றும் மகாராஷ்டிராவில் இருக்கின்ற தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான அரசாங்கத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்துள்ளார்.