இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட 26 தமிழர்களுக்கு 1998 ஆம் ஆண்டு சென்னை பூவிருந்தவல்லி தடா நீதிமன்றம் தூக்குத்தண்டனை விதித்திருந்தது. அதன் பிறகு 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் நன்னடத்தை மற்றும் பரோல் கால செயல்பாடுகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு உச்சநீதிமன்ற தனக்கான சிறப்பு அதிகாரம் வழங்கும் அரசியல் சாசனப் பிரிவு 142 இன் படி கடந்த மே மாத பேரறிவாளனுக்கு விடுதலை வழங்கியது.
அதனை தொடர்ந்து சிறையில் இருக்கும் 6 பேருக்கு விடுதலை அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீதிமன்ற தீர்ப்பை அகில இந்திய காங்கிரஸ் கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் , முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 6 குற்றவாளிகளை விடுதலை செய்தது முற்றிலும் தவறானது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏற்றுக்கொள்ள தகாதது என்று விமர்சித்து உள்ளது.