இந்தியாவின் முன்னாள் பிரபல தடகள வீரரான மில்கா சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் முன்னாள் பிரபல தடகள வீரர் மில்கா சிங் (91 வயது ) சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார் . இதனால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார் . ஆனால் தொற்று பாதிப்பு குறையாததால் மொகாலியில் உள்ள மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார் . உடல் நிலை சீரான பிறகு கடந்த மே மாதம் இறுதியில் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்நிலையில் வீடு திரும்பிய மில்கா சிங்க்கு திடீரென்று ஆக்சிஜன் அளவு குறைந்து காணப்பட்டதால், உடனடியாக சண்டிகரில் உள்ள மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் கொரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் .அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைஅளிக்கப்படுகிறது . முன்னாள் பிரபல தடகள வீரரான மில்கா சிங் ஆசிய விளையாட்டு போட்டிகளில் 4 முறை தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். அதோடு 400 மீட்டர் ஓட்டத்தில் ஆசிய விளையாட்டு மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்ற ஒரே வீரர் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார்.