ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரரான ஸ்டுவர்ட் மேக்கில், கடத்தப்பட்ட வழக்கில்4 பேரை கைது செய்துள்ளனர்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஸ்டுவர்ட் மேக்கில் (வயது 50), கடந்த மாதம் மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். இவர் கடந்த மாதம் ஏப்ரல் 14 ஆம் தேதியன்று , இரவு 8 மணிக்கு சிட்னி நகரில் உள்ள லோயர் நார்த் ஷோர், என்ற பகுதியில் 4 பேர் கொண்ட கும்பலால் காரில் கடத்திச் செல்லப்பட்டார். அவரை கடத்தி சென்ற மர்ம கும்பல் ,அவரை துப்பாக்கி முனையில் மிரட்டி உள்ளது.
பிறகு ஒரு மணி நேரம் கழித்து , அவரை விடுவித்து விட்டது. இதனால் ஸ்டுவர்ட் மேக்கில் காவல்துறையிடம் கடத்தல் சம்பந்தமாக புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் விசாரணை நடத்தி வந்த போலீஸ் அதிகாரிகள் , இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை, நியூ சவுத்வேல்ஸ் காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த கடத்தல் சம்பவத்தில் ,மேக்கில் காதலியின் சகோதரரையும் இதுதொடர்பாக கைது செய்துள்ளனர்.